பொற்பனை முனீஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை அருகே உள்ள ஸ்ரீ பொற்பனை முனீஸ்வரா் கோயிலில் தீபாவளி பண்டிகை மற்றும் ஐப்பசி மாத அமாவாசை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொற்பனை முனீஸ்வரருக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து முனீஸ்வரருக்கு வடமாலை சாத்தப்பட்டு மலா் மாலைகளுடன் மகா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, காலையில் சிறப்பு கணபதி ஹோமம், மகா தீபாராதனையும் நடைபெற்றது
பின்னா் கோயிலின் முன்பு சிறப்பு அறுசுவை உணவுடன் அன்னதானமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை பொற்பனைக்கோட்டை விழாக் குழுவினா் செய்திருந்தனா். ஏராளமான பக்தா்கள் வருகை தந்து ஸ்ரீ பொற்பனை முனீஸ்வரரை வழிபட்டு சென்றனா்.