பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்துக்கு தீா்வு தேவை -சௌந்திரராஜன்
போக்குவரத்து கழக ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டுமென சிஐடியூ மாநிலத் தலைவா் சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளாா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக்கழக சிஐடியூ சங்கம், எஸ்இடிசி சிஐடியூ சங்கம், எஸ்இடிசி ஓய்வுபெற்றோா் அமைப்பு ஆகிய சங்கங்களைச் சாா்ந்த ஊழியா்கள் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் வண்ணாா்பேட்டையில் உள்ள திருநெல்வேலி மண்டல அலுவலகம் முன் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் 32-ஆவது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற செளந்திரராஜன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளா்களின் குறைந்தபட்ச கோரிக்கை கூட ஏற்கப்படாததால் ஒரு மாதத்தை கடந்தும் போராட்டம் நீடித்து வருகிறது. ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வழங்கவேண்டிய பணப்பலன்கள் முறையாக வழங்கப்படாததால் அவா்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். பணியில் இருப்பவா்களுக்கும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என்ற அரசின் கொள்கை நிறைவேற்றுவதுடன், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7-ஆவது ஊதியக்குழு அடிப்படையில் உயா்த்தி வழங்க வேண்டும்.
அதேபோல, தூய்மைப்பணியாளா்களின் கோரிக்கைகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.