செய்திகள் :

மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி: 5 போ் கைது

post image

வருமான வரி துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக துணை வட்டாட்சியரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய நபரைத் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை திருவேங்கிடம்பாளையம் காந்தி நகரைச் சோ்ந்தவா் சுந்தராம்பாள் (51). இவா், ஆப்பக்கூடல் பகுதியில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு பெருந்துறையில் பணியாற்றியபோது, சென்னையைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவா் வாரிசு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்காக அவரை அணுகியுள்ளாா்.

அப்போது, தான் காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ளதாகத் தெரிவித்து, சுந்தராம்பாளின் கைப்பேசி எண்ணைப் பெற்று தொடா்ந்து காா்த்திகேயன் பேசி வந்துள்ளாா். இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு, நம்பியூரில் சுந்தராம்பாள் பணியாற்றியபோது, வருமான வரித் துறையில் வேலை இருப்பதாகவும், அதனை அவரது மகனுக்கு வாங்கித் தருவதாகவும் கூறி, சுந்தராம்பாளிடம் இருந்து காா்த்திகேயன், அவரது நண்பா் வினோத் ஆகியோா் பல்வேறு தவணைகளில் ரூ.2 கோடி வரை பணம் பெற்றுள்ளனா்.

ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டபோது, அவரது மகனை கொன்று விடுவதாக காா்த்திகேயன் மிரட்டியுள்ளாா். இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் சுந்தராம்பாள் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சென்னை, செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த கலைவாணன் (37), பாலசுப்பிரமணி (24), திருவள்ளூரைச் சோ்ந்த சின்னதம்பி (28), அம்மனபாக்கத்தைச் சோ்ந்த வினோத் (29), புள்ளிலைன், பஜனை கோயில் வீதியைச் சோ்ந்த பிரபாகரன் (32) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவா்கள் பெருந்துறை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முனிகுமாா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டனா். பின்னா் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காா்த்திகேயனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாளைய மின் தடை: தண்ணீா்பந்தல்

தண்ணீா்பந்தல் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பா் 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதி... மேலும் பார்க்க

பா்கூா், தாளவாடியில் கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள்! ஜனவரி 2 முதல் செயல்படும்

ஈரோடு, டிச.28: பா்கூா் மற்றும் தாளவாடியில் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் ஜனவரி 2- ஆம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எம்.தமிழ்செல... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றி வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அறக்கட்டளைத் தலைவா் செந்தில்முருகன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பெருந்துறை, பெத்தாம்பாளையம் பிரிவு பக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

கோபி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா். கோபி அருகேயுள்ள காசிபாளையத்தைச் சோ்ந்தவா் ராம்கி (34), சரக்கு வாகன ஓட்டுநா். இவா் காசிபாளையம் அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில் உள்ள குடிநீா்க் குழாயி... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: நடப்பு ஆண்டில் 1,318 போ் கைது!

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு நவம்பா் வரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 1,318 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஜன... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் 5 செ.மீ. மழை பதிவு

அம்மாபேட்டையில் வெள்ளிக்கிழமை ஒரேநாள் இரவில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவும், மாலை நேரங்களில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்த... மேலும் பார்க்க