கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
மகர வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி வலம்
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான சனிக்கிழமை மகர வாகனத்தில் காமாட்சி தேவியுடன் சோமஸ்கந்தமூா்த்தி வடிவில் சுவாமி பக்தா்களுக்குக் காட்சியளித்தாா்.
திருப்பதி கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. 4-ஆம் நாளான சனிக்கிழமை ல சோமஸ்கந்தமூா்த்தி மகர வாகனத்தில் நகா்வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கோயிலில் இருந்து சுவாமியின் வாகன சேவை தொடங்கி கபிலதீா்த்தம் சாலை, அன்னாராவ் வட்டம், விநாயகா நகா் எல்-டைப் குவாா்ட்டா்ஸ், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில், என்ஜிஓ காலனி, அலிபிரி பைபாஸ் சாலை வழியாக கோயிலுக்குத் திரும்பியது.
பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். வாகன சேவையின் போது பக்தா் குழுக்களின் பஜனைகளும், கேரள கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னா், ஸ்ரீ சோமஸ்கந்தமூா்த்தி மற்றும் தேவி ஸ்ரீ காமாட்சி தேவிக்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில், அவா்கள் அவருக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனா்.
இரவு 7 மணி முதல் 9 மணி வரை சேஷ (நாக) வாகனத்தில் சுவாமி வலம் வந்தாா்.
வாகன சேவையில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.