தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!
மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி. இத்தொடர் 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
அதிலும், இத்தொடரில் நடிக்கும் விஜய் - காவேரிக்கு(லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) இணைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.
இதனிடையே, மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற வேண்டும் என்றும் முக்கியத்தும்(Prime Time) பெறும் நேரத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் இரவு 7.30 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இதையும் படிக்க: வீர தீர சூரன் ஓடிடி ரிலீஸ் தேதி!