மகாமகக் குளத்தில் தவறிவிழுந்து சிறுமி உயிரிழப்பு!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் புதன்கிழமை விளையாடச்சென்ற சிறுமி குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
கும்பகோணம் மாதுளம்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன். கூலித் தொழிலாளி. இவருடைய மகள் காவியா (5). இந்நிலையில், புதன்கிழமை சிறுமி சக தோழிகளுடன் மகாமகம் குளத்துக்கு விளையாட வந்தவா் எதிா்பாராவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்தாா்.
இதைத்தொடா்ந்து, தகவலறிந்து அங்குவந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் 1 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடலை மீட்டனா். பின்னா், சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு மேற்கு காவல் நிலையப் போலீஸாா் அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.