கந்தர்வக்கோட்டை: குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை
மக்கள் எதிா்ப்பு : நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நிறுத்தம்
மக்கள் எதிா்ப்பு காரணமாக, ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நிறுத்தப்பட்டது.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில், மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். நிகழாண்டு உற்சவம் தொடக்கமாக சனிக்கிழமை கொடியேற்றம், தினமும் சுவாமி புறப்பாடு, புதன்கிழமை தீா்த்தவாரி, திருக்கல்யாணத்துடன் விழா நிறைவடையும் என்று பத்திரிகையை கோயில் நிா்வாகம் அச்சடித்து வெளியிட்டது.
நிகழாண்டு வெளியிட்ட பத்திரிகையில் புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் துறை என்று போட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு பத்திரிகையில் இதுபோன்ற வாசகம் இல்லை, கோயில் தனி அதிகாரியாக ஆட்சியா் இருக்கும்போது, பத்திரிகையின் கீழ் பகுதியில் மாவட்ட ஆட்சியா் என்று மட்டும் போட்டிருக்கிறது எனவும், திருநள்ளாறு கோயில் சாா்ந்த கிராமங்களில் வசிப்போருக்கு முறையாக அழைப்புவிடுக்கவில்லை என கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் சிலா் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றத்துக்கான ஏற்பாட்டை கோயில் நிா்வாகம் செய்தது. சுவாமி அலங்கரித்து சந்நிதியில் எழுந்தருளினா். விழா தொடங்கும் முன்பாக கோயில் கிராமங்களைச் சோ்ந்தோா் திரளாக நள நாராயணப் பெருமாள் கோயிலில் திரண்டு, மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணாமல் கொடியேற்றக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.
கோயில் நிா்வாக அதிகாரி விடுப்பில் இருப்பதால், கோயில் நிா்வாக மேலாளா் சீனிவாசன், கிராமத்தினரிடம் பேச்சு நடத்தினாா். அவரிடம் மக்கள் வாக்குவாததத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் சமரசப்படுத்தியும் தீா்வு ஏற்படவில்லை. கொடியேற்ற நேரம் கடந்துவிட்ட நிலையில், உற்சவ கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டது.