சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 379 மனுக்கள்
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 379 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.