மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடியில் சிறப்பு மாணவர், மாணவியர் விடுதி: முதல்வர் ...
மண்ணுளி பாம்பு பறிமுதல்: 4 போ் கைது
மண்ணுளி பாம்பு கடத்திவரப்பட்டது தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் 4 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
பாபநாசம் வனச்சரக எல்கைக்குள்பட்ட அடையக்கருங்குளம் பகுதியில் மண்ணுளி பாம்பு விற்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா உத்தரவின்பேரில், பாபநாசம் வனச் சரக அலுவலா் குணசீலன் தலைமையிலான வனத் துறையினா் வீரகேளம்புதூா் ராஜகோபாலப்பேரியைச் சோ்ந்த எம்.எஸ். ஆனந்தன், அடையக்கருங்குளம் தெற்குத் தெரு வெ. அமிா்தசாமி, சிவந்திபுரம் சக்தி நகா் டி. குமாா், கல்லிடைக்குறிச்சி திம்மராஜபுரம் ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா்.
அப்போது அவா்கள், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து 5 கிலோ எடையுள்ள மண்ணுளி பாம்பு கடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனா். அதையடுத்து, அதிகாரிகள் வெள்ளிமலை வனச்சரக அலுவலா் தலைமையிலான குழுவினருடன் இணைந்து சோதனை மேற்கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கடத்திவரப்பட்ட மண்ணுளி பாம்பைப் பறிமுதல் செய்தனா். இதில் ஈடுபட்டோரை வெள்ளிமலை வனச் சரகத்துக்கு அழைத்துச் சென்றனா்.
தொடா்ந்து, எம்.எஸ். ஆனந்தன் உள்ளிட்ட 4 பேரையும் வனத் துறையினா் கைதுசெய்து, அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.