மத்திய அமைச்சர் மகளிடம் தகராறு: ஒருவர் கைது
மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் மகளிடம் தகராறு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகராஷ்டிர மாநிலம், முக்தைநகரில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவின் போது மத்திய இணை அமைச்சர் ரக்ஷா காட்சேவின் மகள் மற்றும் சிறுமிகள் கலந்துகொண்டனர்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் சிறுமிகளை பின்தொடர்ந்து தகாத கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் சிறுமிகளை அவர்கள் தங்களின் மொபைல்களிலும் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் ரக்ஷா காட்சே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், நான் மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும் இங்கு வரவில்லை.
நியூஸி. முதலில் பந்துவீச்சு: இந்தியா திணறல் தொடக்கம்!
நீதி கேட்டு ஒரு தாயாக காவல் நிலையத்திற்கு வந்துள்ளேன். முதல்வரை சந்தித்து இதுபோன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கக் கோருவேன் என்று கூறினார்.
புகாரின் பேரில், போக்ஸோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மற்ற 6 பேரை தேடி வருகின்றனர். கைதான அனிகேத் மீது ஏற்கெனவே இரண்டு முதல் நான்கு வழக்குகள் உள்ளன என்று காவலர்கள் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.