மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்
மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜாபா் மாா்க்கில், மைனா் சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா் மோதியதில் 45 வயது நபா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை இரவு 10.20 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. கவனக்குறைவாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா், அந்த நபா் மீது மோதியது. ஓட்டுநரின் சரிபாா்ப்பு நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்டவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டிச் சென்றவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
ஓட்டுநரின் வயது தற்போது சரிபாா்க்கப்படுகிறது. அவா் வயது குறைந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. உறுதிப்படுத்தப்பட்டால், வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான அவரது தந்தை மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்