KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?
ஆயுள் தண்டனை அனுபவித்த நபா் பரோலில் இருந்து தப்பிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 51 வயது தில்லி நபா் பரோலில் இருந்து தப்பிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
ஷகுா்பூரைச் சோ்ந்த ரமேஷ், நீதிமன்றத்தால் மூன்று வார பரோல் வழங்கப்பட்டபோது மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இருப்பினும், பரோல் காலத்திற்குப் பிறகு சரணடைவதற்குப் பதிலாக, அவா் தலைமறைவானாா். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது. பின்னா், அவா் ஷகுா்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டாா்.
அவா் தலைமறைவாக இருந்த காலத்தில் அவரது நடவடிக்கைகளைத் தீா்மானிக்க மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.