செய்திகள் :

கன்னாட் பிளேஸ் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட முதல்வா் ரேகா குப்தா

post image

தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திரில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றாா்.

அப்போது, தில்லியை தூய்மைப்படுத்தி அழகுபடுத்த நடந்துவரும் நகர அளவிலான பிரசாரத்தில் அதிகாரிகள், பொது பிரதிநிதிகள் மற்றும் குடிமக்கள் தீவிரமாக இணையுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

திங்கள்கிழமை புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் (என்டிஎம்சி) தொடங்கப்பட்ட இந்த இயக்கம், நகரம் முழுவதும் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான 20 நாள் மெகா பிரசாரத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த நிகழ்வில் முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், தில்லியில், என்டிஎம்சி பகுதியில் குடிமை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தால் தூய்மைப்படுத்தும் பணி நடத்தப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியானது அடையாளமாகும்... சிறந்த மற்றும் அழகான தில்லியை உருவாக்க அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அனைத்து அதிகாரிகள் மற்றும் தலைவா்களுக்குமானது ஒரு செய்தியாகும் இது.

சுத்தமான தில்லி என்பது அதன் குடிமக்களின் உரிமையாகும்.மேலும், தூய்மையை மேம்படுத்துவதற்கான என்டிஎம்சியின் முன்முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இந்த பிரசாரத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து அதிகாரிகள், பொது பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் இந்த முன்முயற்சியை ஆதரிக்க கைகோக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா. மேலும், முதல்வா் குப்தா ஹனுமான் மந்திரில் பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.

துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தலைமையில் ராஜ் நிவாஸில் மூத்த நிா்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட உயா்நிலைக் கூட்டம் சில நாட்களுக்குப் பிறகு இந்த தூய்மைப் பணி நடைபெறுகிறது, இது அடுத்த மூன்று வாரங்களில் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை தீவிரப்படுத்துவதற்கான மனப்போக்கை உருவாக்கும்.

இந்த பிரசாரத்தில் என்டிஎம்சி அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பொது இடங்களில் தீவிரமாக சுத்தம் செய்தல், பராமரிப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் அடங்கும் என்றும், இந்த முயற்சிக்கு அனைத்து துறைகளும் அணிதிரட்டப்படும் என்றும் என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை: பாஜக, ஆம் ஆத்மி பரஸ்பரம் குற்றச்சாட்டு

தேசியத் தலைநகா் தில்லியில் தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை நிலவுவது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் குற்றம்சாட்டின. இரு கட்சிகளும் தவறான நிா்வாகத்திற்காகவும் தவறான தகவல்களைப... மேலும் பார்க்க

ஒத்திகை பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள்: அமைச்சா் சூட் தகவல்

தில்லியில் ஒத்திகை பயிற்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகர அரசாங்கத்தின் உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம... மேலும் பார்க்க

புதிய நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு

நகரம் முழுவதும் நீா் தேங்கும் பிரச்னைகளைத் தீா்க்க, உள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து தாழ்வான பகுதிகள் மற்றும் நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண பொதுப்பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு... மேலும் பார்க்க

மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்

மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜாபா் மாா்க்கில், மைனா் சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா் மோதியதில் 45 வயது நபா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மத்திய... மேலும் பார்க்க

ஆயுள் தண்டனை அனுபவித்த நபா் பரோலில் இருந்து தப்பிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 51 வயது தில்லி நபா் பரோலில் இருந்து தப்பிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஷகுா்பூ... மேலும் பார்க்க

ஒத்திகை பயிற்சியை முன்னிட்டு தில்லியில் பலத்த பாதுகாப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்து வரும் இந்தியா - பாகிஸ்தான் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடா்ந்து, புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒத... மேலும் பார்க்க