செய்திகள் :

`மன நிம்மதியே இல்லை எனத் தவிக்கிறீர்களா?' - திருவண்ணாமலை பூர்வ ஜென்ம பரிகார பூஜை சரி செய்யும்

post image

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை அரச இலை தீப வழிபாடு நடைபெற உள்ளது. இதனால் உங்கள் பாவங்கள், தோஷங்கள், சாபங்கள் யாவும் நீங்கி வளமும் நலமும் பெறுவீர்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அரச இலை தீப வழிபாடு

சின்ன விஷயத்துக்கு எல்லாம் அலுத்துக்குறவங்க நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே வராங்க. ஒரு சின்ன தோல்வி, இல்ல அவமானத்தைக் கூட தங்கிக்காம தவறான முடிவை எடுக்குறவங்களும் இப்போ அதிகம்தான். இன்றைய கல்வி முறைகள் அறிவானக் கோழைகளைத்தான் உருவாக்குகிறது போல. அப்போ எல்லாம் எவ்வளவு அடி, எத்தனை முறை தோல்வி ஆனாலும் கண்டுக்காம அடுத்த வேலையை பார்க்கிறவங்க அதிகம் இருந்தாங்க. இப்போ அப்படி இல்ல. அடுத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னே பலரும் பயந்தபடியே வாழ்க்கையை நடத்துறாங்க. அதனால மன அழுத்தம், ரத்தக் கொதிப்புன்னு வியாதிகளை ஏத்துக்கிட்டு நிம்மதியில்லாம வாழுறாங்க. அவங்களுக்கு எல்லாம் ஒரு தீர்வா ஒரு இடம் இருக்கு. அதுதான் திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோயில்.

ஒரு வீடு கட்டவே நமக்கு ஆயுள் முழுக்க உழைக்க வேண்டி இருக்கு. அதிலும் ஏகப்பட்ட சிக்கல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனா பாருங்க இந்த அம்மணி அம்மா சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தனி ஒரு பெண்மணியா நின்னு 171 அடி உயர பிரம்மாண்ட திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தையே கட்டி இருக்காங்கன்னா அவங்க மனதைரியம், விடாமுயற்சி, தியாக உணர்வெல்லாம் நமக்கு பாடம்னே சொல்லலாம். அதைவிட முக்கியமா, அவங்க ஜீவன் முக்தி அடைந்தபோது சொன்னபடியே, இன்னமும் அரூபமா அவங்க இடத்துக்கு வர பக்தர்களுக்கு நிம்மதியும் பிரச்னைகளுக்கான தீர்வையும் அளிக்கிறதுதான் அதிசயம்.

பூர்வ ஜென்ம பரிகார பூஜை

ஒவ்வொரு ஜீவனும் ஐந்து வகையான வடிவங்களைக் கொண்டுள்ளது. அவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எனப்படும். மனதால் வாழும் மனிதராகிய நாம் இறந்ததும் இந்த ஐந்துமே படிப்படியாக மறைந்து இயற்கையோடு கலந்துவிடுவோம். ஆனால் சித்தத்தின் வழியே வாழும் சித்தர்கள் அன்னமய கோசம் எனப்படும் உணவால் வளர்ந்த உடலை மட்டும் இங்கே உதிர்த்துவிட்டு மற்ற நான்கு வடிவங்களாலும் சூட்சுமமாக வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கிறார்கள் என்பதே சித்த உலகத்தின் அடிப்படை தத்துவம்.

அப்படித்தான் அம்மணி அம்மாவும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை முடிவில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே ஜீவசமாதி அடைந்து முன்னிலும் துடிப்பாக தனது பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். 

பூர்வ ஜென்ம பரிகார பூஜை

தமிழகத்தில் முன் ஜென்ம கர்ம தோஷங்களை போக்கும் ஆற்றல் கொண்டதாக 7 ஆலயங்கள் கருதப்படுகின்றன. அவை திருபுவனம், திருப்பாம்புரம், திருத்தேவன்குடி, திருவிடைமருதூர், வைத்தீஸ்வரன்கோவில், கும்பகோணம் ராமநாதசாமி கோயில், திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோயில். அம்மணி அம்மன் ஆலயத்தில் அரச இலை தீப வழிபாடு பூர்வ ஜென்ம பரிகார பூஜையாக அமையும் என்பது சித்தர்கள் வாக்கு.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

தொடர்ந்து நோயால் அவதிப்படுவோர், படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர், அடிக்கடி விரயச் செலவுகளால் அவதிப்படுவோர், எத்தனை சம்பாதித்தாலும் செல்வம் நிற்கவே இல்லையே என்று நினைப்பவர், திருமணத் தடை, பிள்ளைப் பேரு இல்லாதவர்கள், பித்ருக்களுக்கு முறையான வழிபாடு செய்யாதவர்கள், அறிந்தோ அறியாமலோ தவறுகள் செய்தவர், பிள்ளைகளால் கஷ்டப்படுவோர், தீயப் பழக்கங்களால் துன்பப்படும் நபர்கள் நிச்சயம் இந்த பூர்வ ஜென்ம பரிகாரத்தில் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் படும் துன்பம் அனைத்துக்கும் உங்கள் பூர்வ ஜென்ம பாவம் கூட காரணமாக இருக்கலாம். அதை நிவர்த்தி செய்ய பூர்வ ஜென்ம பரிகார பூஜை அரச இலை தீப வழிபாடு உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.

கார்த்திகை தீப நன்னாளில் திருவண்ணாமலை ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜையில் பங்கு கொள்ளுங்கள். இதனால் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. பதிவு செய்யும் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஒரு தீபம் ஏற்றி பரிகார வழிபாடு செய்யப்படும். தூய அரச இலை மீது மண்ணாலான அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் இட்டு, அதில் திரியிட்டு விளக்கேற்றி சம்பந்தப்பட்டவர் பற்றிய விவரங்களைக் கூறி வேண்டுதலை எண்ணி விளக்கேற்ற நிச்சயம் அது பலிக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நன்னாளில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது. இதனால் செல்வ வளம், கடன் பிரச்னை தீர்வு, வேலை-பதவி உயர்வு, வெளிநாட்டு வாய்ப்புகள், வியாபார விருத்தி, தொழில் வளர்ச்சி, குழந்தைகள் நலம், ஆரோக்கிய வாழ்வு, தோஷ நிவர்த்தி முதலான சகல பிரார்த் தனைகளையும் முன்வைத்து நிகழவுள்ளது. நீங்களும் முன்பதிவு செய்து பூஜையில் கலந்து கொண்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை, அம்மணி அம்மாள் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று வாழலாம்.

poorva jenma parihaara pooja qr code

poorva jenma parihaara pooja qr code

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் விபூதி அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

ஏழு ஊர், ஏழு சப்பரம்... மதுரை அருகே ஆர்ப்பரித்த ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா | Photo Album

ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழாஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழாஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழாஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழாஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழாஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழாஏழ... மேலும் பார்க்க

`மின்னொளியில் ஜொலிக்கும் பெரிய கோயில்' மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா | Photo Album

தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரிய கோவில்.தஞ்சை பெரி... மேலும் பார்க்க

நெல்லையப்பர் திருக்கோயில்: ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற திருக்கல்யாணம்... |Photo Album

ஸ்ரீமுருகன்-தெய்வானை திருக்கல்யாண வைபவம். (நெல்லையப்பர் திருக்கோயில்)ஸ்ரீமுருகன்-தெய்வானை திருக்கல்யாண வைபவம். (நெல்லையப்பர் திருக்கோயில்)ஸ்ரீமுருகன்-தெய்வானை திருக்கல்யாண வைபவம். (நெல்லையப்பர் திருக்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா... சூரனை வென்ற ஜெயந்திநாதர்.. | Photo Album

சூரனை வென்ற ஜெயந்திநாதர்.! திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா.!திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாதிருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாதிருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாதிர... மேலும் பார்க்க

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்... படத்தொகுப்பு..!

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்தி... மேலும் பார்க்க

ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசிக்கொண்ட மக்கள்; தாளவாடியில் நடைபெற்ற வினோத திருவிழா! - Photo Album

சாணி அடிக்கும் திருவிழாசாணி அடிக்கும் திருவிழாசாணி அடிக்கும் திருவிழாசாணி அடிக்கும் திருவிழாசாணி அடிக்கும் திருவிழாசாணி அடிக்கும் திருவிழாசாணி அடிக்கும் திருவிழாசாணி அடிக்கும் திருவிழாசாணி அடிக்கும் த... மேலும் பார்க்க