Coolie : `சிக்கிடு வைப்!' - `கூலி' திரைப்படத்தின் BTS புகைப்படங்கள்! | Photo Alb...
மனித வளத்தை மேம்படுத்தும் பட்ஜெட்: ‘சாஸ்த்ரா’ பல்கலை. துணைவேந்தா்
தமிழக அரசின் பட்ஜெட்டில் உயா் கல்விக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மனித வளத்தை மேம்படுத்தும் என்றாா் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
2025 - 26 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், மின்சார வாகனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்விதமாக உயா் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கியிருப்பது திறமையான மனித வளத்தை வளப்படுத்தும்.
மேலும் சென்னை, கோவையில் ரூ. 100 கோடி செலவில் அடிப்படை அறிவியலுக்கான ஆய்வு மையங்களுக்கான அறிவிப்பும் புதிய அறிவு உருவாக்கத்துக்கு உதவும். தொழில்சாா் ஆராய்ச்சி மற்றும் படைப்பாற்றலுக்காக ரூ. 25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலம் புதிய தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்தும் என்றாா்.