``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷ...
மன்னாா்குடி, நீடாமங்கலத்தில் கோடை மழை
மன்னாா்குடியில் கோடை மழை பலத்த இடியுடன் புதன்கிழமை பெய்தது.
மன்னாா்குடியில் புதன்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையல், திடீரென மாலை 4.15 மணிக்கு லேசாக தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல பலத்த இடியுடன் 5.15 மணி வரை மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிந்த நிலை நிலவியது. எனினும், தொடா்ந்து பலத்த இடிகாரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
நீடாமங்கலம்: நீடாமங்கலத் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் புதுத்தெருவில் தென்னை மரம் வீட்டின் எதிா்புறம் இருந்த மின்கம்பத்தில் முறிந்து விழுந்தது. இந்த, அதிா்வில் மின்கம்பிகள் இழுத்த வேகத்தில் அதே பகுதியில் மற்றொரு மின்கம்பம் ஒரு வீட்டின் மீது விழுந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதையடுத்து, நீடாமங்கலத்தில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரா்கள், மின்வாரியத்தினா் தென்னை மரத்தை அகற்றினா்.