அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!
மன்னிப்புக் கேட்காத கமல்: கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்காக மன்னிப்புக் கேட்காததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மொழி குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், கமல் தரப்பில் மன்னிப்புக் கேட்காததால், தக் லைஃப் படம் கர்நாடகத்தில் வெளியாவது ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிகிறது.
ஒரு வாரம் கால அவாகசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கேட்டிருந்தது. நாங்கள் மன்னிப்புக் கோரவில்லை. கன்னட ஃபிலிம் சேம்பர்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோருகிறது என்றும் நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்தார்.
இதையடுத்து, கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துக் கொள்வதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.