மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள்!
அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.
இதுதொடர்பாக அவரது உரையில்,
அடுத்த நிதியாண்டில், நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி ஆகியவை அமைக்கப்படும். இதைத்தவிர மாணவர்களுக்கான பாடங்களைத் தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்கத் தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எஸ்சி/எஸ்டி பெண்களைத் தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம் திட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.