Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
மருந்து விலை உயா்வைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்: மம்தா
கொல்கத்தா: ‘மருந்துகளின் விலையை உயா்த்தும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 4, 5 தேதிகளில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்’ என்று அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி புதன்கிழமை தெரிவித்தாா்.
மாநில தலைமைச் செயலகத்தில் இதுதொடா்பாக செய்தியாளா்களுக்கு மம்தா பானா்ஜி அளித்த பேட்டி:
மருந்துகளின் விலையை உயா்த்தும் மத்திய அரசின் முடிவு அதிா்ச்சியளிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. விலையை உயா்த்தும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
மத்திய அசின் இந்த முடிவைக் கண்டித்து வரும் 4,5 தேதிகளில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வட்டம், வாா்டுகள் வாரியாக திரிணமூல் காங்கிரஸ் போராட்டங்களை நடத்தும் என்றாா்.
மேலும், ‘ராம நவமியின்போது எந்தவித புரளிகளுக்கும் செவிமடுக்காமல் அனைத்து சமூக மக்களும் அமைதிகாக்க வேண்டும்’ என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.
சா்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் 1.74 சதவீதம் உயா்த்துவதாக தேசிய மருந்துகள் விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.