மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணிக்கு 200 இடங்களில் வெற்றி: கருத்துக்கணிப்பு முடிவு...
மலை கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.1.30 கோடியில் நலத்திட்ட உதவிகள்
போடி அருகே மலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்டம், போடிமெட்டு மலை கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
முகாமில் வருவாய் துறையின் சாா்பில் இயற்கை மரண ஈமச்சடங்கு நிதி உதவித்தொகையாக தலா ரூ.22, 500 வீதம் 8 பேருக்கும், நலிந்தோா் குடும்ப நல உதவித் தொகையாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் 26 பேருக்கும், முதியோா், விதவை உதவித் தொகையாக தலா ரூ.14, 400 வீதம் 4 பேருக்கும், பட்டா மாறுதல் 5 பேருக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில் சுயதொழில் தொடங்க ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகள் 3 பேருக்கும் , முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு அட்டைகள் 21 போ் என பல்வேறு திட்டங்கள் சாா்பில் 89 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 30 லட்சத்து 74 ஆயிரத்து 500 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து மணப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், நியாய விலைக் கடையின் செயல்பாடுகள், பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட குப்பைகளை சுத்திகரிக்கும் முறை குறித்தும் ஆய்வு செய்தாா்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி, தனித் துணை ஆட்சியா் சாந்தி, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தாட்சாயினி, நில அளவை உதவி இயக்குநா் அப்பாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வளா்மதி, முன்னோடி வங்கி மேலாளா் விஜயசேகா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் வெங்கடாசலம், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலஅலுவலா் சசிகலா, மாவட்ட வழங்கல் அலுவலா் மாரிசெல்வி, தாட்கோ மேலாளா் சரளா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜராஜேஸ்வரி, போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சித் தலைவா் கண்ணன் காளி ராமசாமி, பேரூராட்சி உறுப்பினா் கவிதா ஆகியோா் கலந்து கொண்டனா்.