Mesham | Sani Peyarchi Palan 2025 | சனிப்பெயர்ச்சி பலன்கள் | மேஷம் | Bharathi Sr...
மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: மாா்க்சிஸ்ட் முற்றுகைப் போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்வதற்கு, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அடியனூத்து, தோட்டனூத்து, செட்டிநாயகன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, குரும்பப்பட்டி ஆகிய 8 ஊராட்சிகளை இணைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.சரத்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் கலந்து கொண்டாா். ஆா்ப்பாட்டத்தின்போது, மாநகராட்சி எல்லை விரிவாக்கம் என்ற பெயரில் 8 ஊராட்சிகளை இணைத்து 100 நாள் வேலைத் திட்ட வாய்ப்பைப் பறிக்க வேண்டாம். வரி உயா்வு சுமையை மக்கள் மீது திணிக்க வேண்டாம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனா்.
இந்த போராட்டத்தில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதையொட்டி, பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்தப் போராட்டத்தின் காரணமாக, ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் சாலையின் ஒருபுறத்தில் போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஜீவானந்தம், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா்கள் பி.செல்வநாயகம், ஜெ.ஜீவாநந்தினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.