மாநகரில் இன்றுமுதல் இரு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்
கோவை மாநகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு 2024- 2025-ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை மாநகராட்சிக்கு மக்கள் செலுத்த வசதியாக அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரி வசூல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பா் 16 மற்றும் 17 ஆகிய இரு நாள்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகரில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள்:
கிழக்கு மண்டலம் 5-ஆவது வாா்டுக்கு உள்பட்ட வலியம்பாளையம் மாநகராட்சிப் பள்ளி, 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நேரு நகா் பேருந்து நிறுத்தம் அருகே, மேற்கு மண்டலம் 35-ஆவது வாா்டுக்கு உள்பட்ட இடையா்பாளையம் தேவாங்க வீதி கற்பக விநாயகா் கோயில், 75-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் திடல், வடக்கு மண்டலம் 10-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சரவணம்பட்டி- சத்தி சாலை சென்ட்ரல் பாா்க் அடுக்குமாடி குடியிருப்பு, தெற்கு மண்டலம் 86-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கரும்புக்கடை அறிஞா் அண்ணா காலனி ஆரம்பப் பள்ளி, 88-ஆவது வாா்டுக்கு உள்பட்ட குனியமுத்தூா் தால் பேக்டரி வீதி, பழனியாண்டவா் கோயில் மண்டபம், 89-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சுண்டக்காமுத்தூா் சுகாதார ஆய்வாளா் அலுவலகம், மத்திய மண்டலம் 32-வது வாா்டுக்கு உள்பட்ட சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா, 63-ஆவது வாா்டுக்கு உள்பட் பெருமாள் கோயில் வீதி, 80-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி ஒக்கிலியா் காலனி பள்ளியில் முகாம்கள் நடைபெறவுள்ளன.