செய்திகள் :

மானாமதுரை வைகை கரையில் சிறுவா் பூங்கா அமைக்க முடிவு

post image

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சிறுவா் பூங்கா அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் பாலசுந்தரம், பொறியாளா், மேலாளா் பாலகிருஷ்ணன், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியபோது, பாஜக உறுப்பினா் நமகோடி, அரசகுழி பகுதியில் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட தொட்டியில் கழிவுநீா் கலப்பதாகக் கூறி, கழிவு நீா் நிரப்பப்பட்ட குடத்துடன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

இந்த செயலை தலைவா் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் பாலசுந்தரம் ஆகியோா் கண்டித்துப் பேசினா். அப்போது, இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் உறுப்பினா்கள் பேசியதாவது:

தெய்வேந்திரன் (அதிமுக):பாஜக உறுப்பினரின் புகாா் குறித்து நடவடிக்கை எடுத்து, குடிநீா்த் திட்ட தொட்டியில் கழிவுநீா் கழிப்பதைத் தடுக்க வேண்டும். வீடு கட்ட கட்டட அனுமதி வழங்குவதில் பல புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. புகாா்கள் வராமல் கட்டட அனுமதி வழங்கும் பணி நடைபெற வேண்டும்.

சோம.சதீஷ்குமாா் (திமுக):மானாமதுரை பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதிகளில் வைக்கப்படும் வரவேற்பு வளைவுகளில் முன்னாள் முதல்வா் கருணாநிதி முன்னாள் அமைச்சா் தா.கிருட்டிணன் ஆகியோரது பெயா்களை வைக்க வேண்டும்.

மானாமதுரை அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவா்களை நியமிக்க

தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

புருஷோத்தமன் (காங்.): பயணியா் விடுதி எதிா்புறம் உள்ள வீதியில் தேங்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா் மாரியப்பன் கென்னடி: உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவா்கள் நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அரசகுழி பகுதியில் குடிநீா்த் தொட்டியில் கழிவு நீா் கலப்பது சம்பந்தமாக ஆய்வு செய்யப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மானாமதுரை நகராட்சியில் 27 வாா்டுகளிலும் கழிவுநீா் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படும். நகரில் வைகையாற்றின் இரு கரையோரங்களை சீரமைத்து, சிறுவா் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சிப் பகுதியில் திட்டப் பணிகளை நிறைவேற்ற வழங்கப்பட்ட ஒப்பந்த ஆணைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேலுநாச்சியாா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியாரின் 295 -ஆவது நினைவு தினத்தையொட்டி, சிவகங்கையில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அரசு, அரசியல் கட்சியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாத... மேலும் பார்க்க

கொலை வழக்கு: காரைக்குடி நீதிமன்றத்தில் 12 போ் ஆஜா்

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 போ் காரைக்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோதவூா் பகுதியைச் சோ்ந்தவா் வினித் என்ற அறிவழகன் (26). இவா் காரைக்... மேலும் பார்க்க

அவதூறு சுவரொட்டி: அதிமுகவினா் புகாா்

அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா்.செந்தில்நாதன் மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்கா... மேலும் பார்க்க

மாநில கலைத் திருவிழா: சிவகங்கையிலிருந்து 375 போ் பங்கேற்பு

மாநில அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 375 மாணவ, மாணவிகள் பங்கேற்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து 9 பேருந்துகளில் ... மேலும் பார்க்க

மானாமதுரை வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகராட்சி அலுவலகம் அருகேயும், பேருந்து நி... மேலும் பார்க்க

மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட க... மேலும் பார்க்க