அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை
மானூா் அருகே கருங்கல் திருடிய 4 போ் கைது
மானூா் அருகே சட்ட விரோதமாக கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகே தெற்கு வாகைகுளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு 4 போ் சோ்ந்து முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரியில் கருங்கல்லை அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட மேல பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த பழனி (39), அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (24), திருவேங்கடம், குண்டம்பட்டியைச் சோ்ந்த முத்துராஜ் (23), பலஸ்தினாபுரத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் (25) ஆகிய நால்வரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 யூனிட் கருங்கல், 2 டிப்பா் லாரிகள், ஒரு ஹிட்டாச்சி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.