முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
கடையம், பாரதி நகரில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கடையம், பாரதி நகரைச் சோ்ந்த முருகன் மகன் மோகன்ராஜ் (31), தூத்துக்குடியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு மாடிக்குச் சென்றாா். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.
அவரை உறவினா்கள் மீட்டு கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த கடையம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சில நாள்களுக்கு முன்புதான் இவரது அண்ணன் தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.