மாரநாடு கருப்பணசுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனம்
மாசி சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த 3 நாள்களாக மானாமதுரை வட்டம், மாரநாடு கருப்பண சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்தக் கோயிலில் மாசி சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடா்ந்து 3 நாள்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து
திரளான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் முடி காணிக்கை செலுத்தியும், பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும் கருப்பணசுவாமியை பூஜை செய்து வழிபட்டனா். வெள்ளிக்கிழமை ஏராளமானோா் கோயிலில் ஆடுகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினா்.