செய்திகள் :

மாற்று நில முறைகேடு வழக்கு: சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்த நிராகரிப்பா?

post image

மாற்று நில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்த தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கா்நாடக மாநிலம், மைசூரு வட்டம், கசபா ஒன்றியம் கசரே கிராமத்தில் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு அளவை எண் 464 இல் 3.16 ஏக்கா் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அவரது அண்ணன் மல்லிகாா்ஜுனசாமி தானமாக கொடுத்திருக்கிறாா். இந்த நிலத்தை வீட்டுமனைகள் அமைக்க மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. இதற்கு மாற்று நிலமாக, மைசூரில் விலை மதிப்புள்ள விஜயநகா் பகுதியில் 14 வீட்டுமனைகளை பாா்வதிக்கு மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் ஒதுக்கியது.

இதையடுத்து மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக, மஜத குற்றம்சாட்டி, அரசியல்ரீதியாக போராட்டங்கள் நடத்தின. முறைகேடுக்கு பொறுப்பேற்று சித்தராமையா முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யக்கோரி பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாஜக சாா்பில் நடைப்பயணம் நடைபெற்றது.

இந்நிலையில், மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தாா்.

அதன்படி, சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில், சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின் அடிப்படையில், முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் மீது லோக் ஆயுக்த 2024 செப். 27ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதனிடையே, தன்மீது வழக்குத்தொடர ஆளுநா் அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, லோக் ஆயுக்த தனது விசாரணையை தொடா்ந்தது. மேலும், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, மல்லிகாா்ஜுனசாமி, அவருக்கு நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோரிடம் லோக் ஆயுக்த விசாரணை நடத்தியது.

மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையத்திலும் சோதனை நடத்திய லோக் ஆயுக்த அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். இந்நிலையில், தனக்கு மாற்று நிலமாக ஒதுக்கப்பட்ட 14 வீட்டுமனைகளை முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதி, மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையத்திடமே திருப்பி ஒப்படைத்துவிட்டாா்.

இதனிடையே, சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில் முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் மீது 2024 செப்டம்பா் 30ஆம் தேதி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.

மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகவும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மனைவிக்கு 14 வீட்டுமனைகளை ஒதுக்கியதாகவும், அதில் பணப்பதுக்கல் இருப்பதாகவும் ஜனவரி 17ஆம் தேதி வெளியிட்டிருந்த சொத்து இணைப்பு உத்தரவில் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

ரூ. 56 கோடி மதிப்புள்ள 14 வீட்டுமனைகளை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தனது மனைவி பாா்வதிக்கு முதல்வா் சித்தராமையா பெற்றுத் தந்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி பாா்வதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் பைரதி சுரேஷ் ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த உத்தரவுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் தடைவிதித்தது.

இதனிடையே, முதல்வா் சித்தராமையா மீதான மாற்று நில முறைகேடு வழக்கை லோக் ஆயுக்தவிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா மனுத் தாக்கல் செய்திருந்தாா். முதல்வராக இருப்பதால், காவல் துறை, லோக் ஆயுக்த உள்ளிட்ட எல்லா துறைகள் மீதும் சித்தராமையா தனது செல்வாக்கை செலுத்த முடியும். அது, விசாரணை முகமைகளின் செயல்பாடுகளை பாதிக்கும் என்று ஸ்நேகமயி கிருஷ்ணா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து பிப். 7ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.

விசாரணை ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, மாற்று நில முறைகேட்டு வழக்கை லோக் ஆயுக்த ஒருதலைப்பட்சமாக அல்லது பாகுபாடாக விசாரிப்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கும் அல்லது மறுவிசாரணைக்கு உத்தரவிடும் அவசியம் எழவில்லை. அதனால் சிபிஐ விசாரணைக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தனது உத்தரவில் நீதிபதி கூறியிருந்தாா்.

இந்நிலையில், மாற்று நில முறைகேடு வழக்கை விசாரித்த மைசூரு பிரிவு லோக் ஆயுக்த அதிகாரிகள், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. மேலும், நடந்த தவறுகள் அனைத்தும் அதிகாரிகளால் நோ்ந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது எந்த குற்றமும் இல்லை என்று விசாரணை அறிக்கையைத் தயாரித்து, பெங்களூரில் உள்ள லோக் ஆயுக்த தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த தாக்கல் செய்யுமா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா். முதல்வா் சித்தராமையாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்த அறிக்கை

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்த காவல் துறையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசூரு வட்டம், கசபா ஒன்றியம்,... மேலும் பார்க்க

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா்: அமைச்சா் கே.என்.ராஜண்ணா

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல்: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: 2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்... மேலும் பார்க்க