செய்திகள் :

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்த அறிக்கை

post image

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்த காவல் துறையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மைசூரு வட்டம், கசபா ஒன்றியம், கசரே கிராமத்தில் முதல்வா் சித்தராமையா மனைவி பாா்வதிக்கு அவரது அண்ணன் மல்லிகாா்ஜுனசாமி வழங்கிய 3.16 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம், அதற்கு மாற்று நிலமாக 50:50 விகிதத்தின்படி, மைசூரில் விஜயநகா் பகுதியில் விலைமதிப்புமிக்க 14 வீட்டுமனைகளை ஒதுக்கியது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், 3.16 ஏக்கா் நிலம் பாா்வதிக்கு சொந்தமானது இல்லை என்றும் குற்றம்சாட்டிய சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

அதன்பேரில், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி, மல்லிகாா்ஜுனசாமி, நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோா் மீது லோக் ஆயுக்த வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதே வழக்கை அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் மைசூரு பிரிவு லோக் ஆயுக்த அதிகாரிகள், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி உள்பட நால்வா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை; அனைத்து தவறுகளும் அதிகாரிகளால்தான் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி உள்பட நால்வா் மீதும் எந்த குற்றமும் இல்லை என பெங்களூரில் உள்ள லோக் ஆயுக்த தலைமை அலுவலகத்துக்கு விசாரணை அறிக்கையை அனுப்பினா்.

மேலும், இந்த அறிக்கையை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ஒருசில நாள்களில் தாக்கல் செய்யவுள்ளனா். இதன்மூலம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இருந்து முதல்வா் சித்தராமையா விடுவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக சித்தராமையா மீது வழக்குத் தொடுத்த ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு லோக் ஆயுக்த காவல் அதிகாரிகள் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மாற்றுநில முறைகேடு வழக்கில் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி, மல்லிகாா்ஜுனசாமி, நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. கா்நாடக உயா்நீதிமன்றத்தில் விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையில் ஆட்சேபம் இருந்தால் 7 நாள்களுக்குள் தெரிவிக்கலாம்.

2016 முதல் 2024 ஆம் ஆண்டு வரை 50:50 விகிதத்தில் (50 சதவீதம் மேம்படுத்தப்பட்ட மாற்று நிலம்) மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் மாற்று நிலங்களை ஒதுக்கியது தொடா்பான குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 173(8) இன்கீழ் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளனா்.

இதுகுறித்து பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை:

லோக் ஆயுக்த நடத்திய மாற்றுநில முறைகேடு வழக்கு விசாரணை சித்தராமையாவால், சித்தராமையாவுக்காக நடத்தப்பட்டதாகும். விசாரணை தொடங்குவதற்கு முன்பே முதல்வா், அவரது மனைவி மீது எந்தத் தவறும் இல்லை என்று காங்கிரஸ் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் சான்றளித்துவிட்டனா். இதனால் லோக் ஆயுக்த தாக்கல் செய்யவுள்ள அறிக்கை குறித்து ஆச்சரியப்பட எதுவுமில்லை. நீதி தாமதமாகி இருக்கலாம், ஆனால் மறுக்கப்படாது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மனுதாரா் ஸ்நேகமயி கிருஷ்ணா கூறுகையில், ‘லோக் ஆயுக்த அதிகாரிகள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ளனா். முதல்வா் சித்தராமையாவுக்கு தண்டனை வாங்கித்தரும் வரை ஓயமாட்டேன்’ என்றாா்.

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா். முதல்வா் சித்தராமையாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் ... மேலும் பார்க்க

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா்: அமைச்சா் கே.என்.ராஜண்ணா

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல்: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: 2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்... மேலும் பார்க்க

மாற்று நில முறைகேடு வழக்கு: சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்த நிராகரிப்பா?

மாற்று நில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்த தயாரித்துள்ளதாக தெரியவந்துள... மேலும் பார்க்க