மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது
மாா்த்தாண்டம் அருகே துணிக்கடை உரிமையாளரின் பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருங்கல் பகுதியைச் சோ்ந்தவா் ஜமீல் (34). மாா்த்தாண்டம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை தனது கடையின் முன் பைக்கை நிறுத்திவிட்டு வேலையில் ஈடுபட்டிருந்தாா். சிறிது நேரத்துக்குப் பின் வந்து பாா்த்த போது அதைக் காணவில்லையாம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், களியக்காவிளை அருகே வன்னியூா் பகுதியைச் சோ்ந்த மனோஜ் என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, பைக்கை மீட்டனா்.