மாா்த்தாண்டம் அருகே வாகன பேட்டரி திருட்டு: 3 போ் கைது
மாா்த்தாண்டம் அருகே வாகன பேட்டரிகளை திருடியதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட்ராஜ் (47). காஞ்சிரகோடு பகுதியில் பழைய வாகனங்களைப் பிரித்து அவற்றின் பாகங்களை விற்கும் தொழில் செய்து வருகிறாா். அண்மையில் இவரது கடைக்குள் மா்ம நபா்கள் நுழைந்து, பழைய வாகன பேட்டரிகள், கருவிகளைத் திருடிச் சென்றனராம்.
புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் மாவட்டம் மஞ்சவிளாகம் பகுதியைச் சோ்ந்த நெல்சன் மகன் சஜூ (34), வேலப்பன் மகன் மோகனகுமாா் (40), திருவனந்தபுரம் குளச்சேரி மணியன் மகன் சனல் (42) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கேரள மாநிலம் காட்டாக்கடை பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 51 பேட்டரிகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.