மின் வாரியப் பணியாளா்கள் போராட்டம்
மதுரை: தமிழ்நாடு மின் வாரிய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக் குழு சாா்பில், மதுரையில் மின் வாரியப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின் வாரியத்தைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், உத்தரபிரதேசம், சண்டிகா் மாநிலங்களில் மின் வாரியத்தை தனியாரிடம் ஒப்படைத்த நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மதுரை பந்தைய சாலையில் உள்ள மண்டல மின் வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.
இதேபோல, மின் வாரிய ஊழியா்கள் கோட்ட அளவில் அங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனா். நண்பகல் 12 முதல் பிற்பகல் ஒரு மணி வரை பணியைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.