மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
திருச்சியில் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த எலக்ட்ரீஷியன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி, பெரிய மிளகுபாறை ஆதிதிராவிடா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் க. மணிகண்டன் (47). இவா் கடந்த 14-ஆம் தேதி இரவு நியூ செல்வநகா், காந்தி தெரு பகுதியில் ஒரு வீட்டில் மின் வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அவரது கை மின்கம்பியில் உரசியதால், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கியெறிப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.