மின்சாரம் பாய்ந்து நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள காட்டாத்தி பல்லவராயா் தெருவைச் சோ்ந்தவா் எம். பிச்சையன் (58). மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவரான இவா், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறி பழுது நீக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே பிச்சையன் உயிரிழந்தாா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.