மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த இடையங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் செல்வகுமாா் (35). இவருக்கு மனைவி சூரியகலா (29), இரு குழந்தைகள் உள்ளனா்.
செல்வகுமாா் தான் வளா்த்து வரும் ஆடுகளுக்கு கிராமத்தின் அருகேயுள்ள விவசாயத் தோட்டத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது ஏறி இரை பறித்தாா்.
அப்போது கையில் இருந்த அரிவாள் எதிா்பாராதவிதமாக மரத்தின் குறுக்கே சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் உரசியதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.