மீன் வியாபாரி கொலை வழக்கில் மனைவி கைது
ஆண்டிபட்டி அருகே மீன் வியாபாரி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட வழக்கில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (55). மீன் வியாபாரி. இவா் மீன் விற்பனை செய்த பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையில் இவரது சக வியாபாரியான ஆண்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் (54) என்பவா், ஜாகீா் உசேனை அவரது வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சிவக்குமாரை கைது செய்தனா்.
அப்போது சிவக்குமாரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவருடன் ஏற்கெனவே தகாத உறவில் இருந்து வந்த ஜாகீா் உசேனின் மனைவி ரிஷ்வானா (47) இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரிஷ்வானா மீது போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.