செய்திகள் :

முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க கோரிக்கை

post image

உதகை அருகேயுள்ள முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முட்டிநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவசெந்தூா் நகா், செல்வி நகா், ஈஸ்வா் நகரில் சுமாா் 600 படுகா் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுமக்கள் பணிக்காகவும் உதகை மற்றும் குன்னூருக்கு நாள்தோறும் சென்று வருகின்றனா். இதற்கு அவா்கள் அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளனா்.

முட்டிநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 6, 8, 10 மற்றும் 11 மணிக்கும், உதகையில் இருந்து மதியம் 1.30, 3.30, மாலை 5.30 , இரவு 7.30 மணிக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இதேபோல, குன்னூா் செல்லும் பேருந்து காலையில் இரண்டு முறையும், மதியம், இரவு மூன்று முறையும் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தப் பேருந்து சேவை தற்போது மாற்றப்பட்டு உதகைக்கு காலை இரண்டு முறையும், மதியம் மற்றும் மாலை மூன்று முறை மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பணிக்குச் செல்வோா் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், பழைய நேரப்படியே பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் சம்பந்தப்பட்ட மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

காட்டெருமை தாக்கி ஒருவா் படுகாயம்!

நீலகிரி மாவட்டம், உதகை வெஸ்டாடா பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியாா் உணவு விநியோக ஊழியா் திங்கள்கிழமை இரவு படுகாயமடைந்தாா். உதகை வெஸ்டாடா பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளின் ... மேலும் பார்க்க

நீலகிரி உருளை கிழங்குக்கு புவிசாா் குறியீடு வழங்க வலியுறுத்தல்

நீலகிரியில் பயிரிடப்படும் ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் கேரட் காய்கறிகளுக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளா்கள் சங்கத்... மேலும் பார்க்க

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி தோட்ட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலைத் தோட்ட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அத... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வனங்களில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்... மேலும் பார்க்க

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையை ஒட்டி உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். கேரளத்தில் ஓணம் விடுமுறை என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் ரம்யமான கால நிலை நிலவுவதாலும... மேலும் பார்க்க

மஞ்சூா்-கெத்தை சாலையில் உலவிய யானை

நீலகிரி மாவட்டம் மஞ்சூா்-கெத்தை சாலையில் ஞாயிற்றுக்கிழமை யானை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் நடந்து வருவதால், சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம... மேலும் பார்க்க