தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
காட்டெருமை தாக்கி ஒருவா் படுகாயம்!
நீலகிரி மாவட்டம், உதகை வெஸ்டாடா பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியாா் உணவு விநியோக ஊழியா் திங்கள்கிழமை இரவு படுகாயமடைந்தாா்.
உதகை வெஸ்டாடா பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், தனியாா் உணவு விநியோக ஊழியா் கோனஸ் குட்டன் என்பவா் அங்குள்ளவா்களுக்கு உணவு விநியோகம் செய்ய திங்கள்கிழமை இரவு வந்தபோது, அவ்வழியாக வந்த காட்டெருமை தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த அவருக்கு உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.