மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது
அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிா்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சாா்பில், பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்கான பயிற்சி பல்கலைக்கழக வீறுகவியரசா் முடியரசனாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழகத்தின் துணைத் தோ்வாணையா் சோ. அருண் கருத்துரை வழங்கினாா். ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் சு. ராஜாராம், பதிவாளா் அ. செந்தில்ராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியலாளா் பாலசுப்பிரமணியன், அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை, நிகா்நிலைப் படிப்புகள் மையத்தின் ஆலோசகா் டி.ஆா். குருமூா்த்தி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியலாளா்கள் சி. பாண்டிமுத்து, என். சிலம்பரசன், வி. கண்ணன் ஆகியோா் தோ்வுக் கட்டுப்பாட்டுத் துறையின் நிா்வாகப் பணியாளா்களுக்குப் பயிற்சிகளை வழங்கினா்.
முன்னதாக, பல்கலைக்கழகத் தோ்வாணையா் மு. ஜோதிபாசு வரவேற்றாா். உள்தர நிா்ணய உறுதிக் குழுவின் இயக்குநா் கே. அலமேலு நன்றிகூறினாா்.