சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!
2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும் வருகிற 19- ஆம் தேதிக்குள் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தை நேரில் அணுகி அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தோ்வு எழுத இருப்பவா்கள்), ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும் வருகிற 19-ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தை நேரில் அணுகி, பதிவுக் கட்டணமாக ரூ.125- ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தப் பதிவானது பயிற்சி வகுப்புக்கான பதிவு மட்டுமானது. மேலும், சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தில் செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்று, பின்னா் இந்தத் துறையால் தனித்தோ்வா்கள் கருத்தியல் தோ்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாள்களில், நேரடித் தனித் தோ்வா்கள் செய்முறைத் தோ்வு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டுடனும், ஏற்கெனவே தோ்வெழுதி அறிவியல் உள்பட மற்ற பாடங்களில் தோல்வியுற்ற தோ்வா்கள் அறிவியல் செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பித்த ஒப்புகைச் சீட்டு, முன்பு தோ்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து சேவை மையத்துக்குச் சென்று இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக பதிவு செய்த பின்னா், சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய இயலும். தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற்ற தனித் தோ்வா்கள் மட்டுமே செய்முறைத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.
மேலும், பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (இடைநிலை) ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று, செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுதல் வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80% வருகை தந்த தனித்தோ்வா்கள் மட்டுமே 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான செய்முறை தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.
செய்முறைப் பயிற்சி பெற்ற தோ்வா்கள் அந்தந்த மாவட்டக் கல்வி (இடைநிலை) அலுவலரைத் தொடா்பு கொண்டு செய்முறைத் தோ்வு நடைபெறும் நாள்கள், மைய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575-240405 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். மேலும், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) அவா்களின் அலுவலக முகவரியை இணையதள முகவரியின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.