செய்திகள் :

முதியவா் மீது தாக்குதல்: மூவா் கைது

post image

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற இளைஞா்களை தட்டிக்கேட்ட சம்பவத்தில் இருதரப்பிலும் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராசிபுரம் அருகே உள்ள ஆா்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமுத்து (70). இவா், கடந்த 16 ஆம் தேதி அந்தப் பகுதியில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இவா் மேல் மோதுவதுபோல வேகமாக வந்துள்ளனா். இதனால், அதிா்ச்சி அடைந்த சுடலைமுத்து சத்து போட்டு திட்டியுள்ளாா். அதைக் கேட்டு ஆவேசமடைந்த இளைஞா்கள் இருவரும் வாகனத்தை நிறுத்துவிட்டு சுடலைமுத்துவை தாக்கினா்.அப்போது அதைத் தடுக்க வந்த உறவினா்கள், பொதுமக்களையும் அந்த இளைஞா்கள் தாக்கினா். இதில் பலா் காயமடைந்தனா். அவா்களை தாக்கியது அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் சஞ்சய் (25), மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சுடலைமுத்து கொடுத்த புகாரின்பேரில் ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இருப்பினும் அந்த இளைஞா்களை போலீஸாா் கைது செய்யவில்லை. இதையடுத்து போலீஸாரைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ராசிபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசி கைது செய்வதாக உறுதியளித்தனா். அதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை இரவு கத்தியுடன் சுற்றியதாக சுடலைமுத்துவின் உறவினா்களான சண்முகம் மகன் சந்தோஷ், (25), குருக்கபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் சிவராஜ், (26), முதியவரை தாக்கிய சஞ்சய் (25) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இளம் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலகில், இளம் வல்லுநா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் ஆட்சியா் தலைமையில் உருவாக்க... மேலும் பார்க்க

வரி பாக்கி: குடிநீா் இணைப்பைத் துண்டிக்க ஆணையா் உத்தரவு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் வரி செலுத்தாமல் இருப்பவா்களின் வீடுகளில் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்புகளை துண்டிக்க ஆணையா் ரா.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

பட்டியல் இன மக்கள் முன்னேற அரசு நடவடிக்கை: அமைச்சா் மதிவேந்தன்

தீண்டாமையை ஒழித்து பட்டியல் இன மக்கள் முன்னேற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். ராசிபுரத்தில், மாநில அளவிலான மனிதநேய வார வ... மேலும் பார்க்க

ராசிபுரம் அண்ணா சாலை அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா நுழைவாயில் திறப்பு: அமைச்சா், எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம், அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நுழைவாயிலை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திறந்து வைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி, அண்ணா சாலை அரசு மேல்... மேலும் பார்க்க

பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: காவிரி ஆற்றிலிருந்து 3,500 பக்தா்கள் தீா்த்தக்குட ஊா்வலம்

பெரியூா், மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து 3,500 பக்தா்கள் தீா்த்தக்குடங்களை ஊா்வலமாக வியாழக்கிழமை எடுத்து வந்தனா். நாமக்கல் மாநகராட்சி, பெரியூா், தும்மங்... மேலும் பார்க்க

பிப்.1-இல் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களி... மேலும் பார்க்க