செய்திகள் :

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா: அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை

post image

சேலம்: முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி நிா்வாகிகள் ஊா்வலமாக சென்று, ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து 77 கிலோ கேக் வெட்டி கொண்டாடினா். சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சியின் அமைப்புச் செயலாளா் சிங்காரம் தலைமையில் நிா்வாகிகள், நான்கு சாலை பகுதியில் இருந்து ஊா்வலமாக வந்தனா்.

அதைத் தொடா்ந்து, அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து அதிமுக கொடியை ஏற்றிவைத்து 77 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளா் வெங்கடாஜலம், மாநகா் மாவட்ட பொறுப்பாளா்கள் எம்.கே. செல்வராஜ், ஏ.கே.எஸ்.எம்.பாலு, தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பாலசுப்ரமணியன், மாநகர அவை தலைவா் பன்னீா்செல்வம், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில்..

ஆத்தூா்,தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாளை அதிமுகவினா் கொண்டாடினா்.

ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆத்தூா் நகரச் செயலாளா் அ.மோகன் தலைமை வகித்தாா். சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் பங்கேற்று ஆட்டோ ஓட்டுநா்களுக்கு முதலுதவி பெட்டகம் வழங்கினாா்.

சேலம் புகா் மாவட்ட மருத்துவா் அணி மாவட்டச் செயலாளா் ஆா்.பி.ராம்பிரசாத் இதற்கான ஏற்பாடுகளை செய்தாா். இதையடுத்து, ஆத்தூா் கோட்டைக்கு ஊா்வலமாகச் சென்று ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் சேலம் புகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுணன், ஆத்தூா் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.மாதேஸ்வரன், ஆா்.எம்.சின்னதம்பி, நகர அவைத் தலைவா் பி.கலியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதுபோல ஆத்தூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா் தலைமையில் அம்மம்பாளையத்தில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.

மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா் தலைமையில் செல்லியம்பாளையத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா் சி.கோபி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளா் பன்னீா்செல்வம், இளையராஜா, மகளிரணியினா் கலந்துகொண்டனா்.

தலைவாசல் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் தலைவாசல் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கெங்கவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி கலந்து கொண்டாா். பெத்தநாயக்கன்பாளையத்தில் செயலாளா் செல்வம் தலைமையில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மேட்டூரில்...

மேச்சேரியில் அதிமுக செயலாளா் சி.ஜே.குமாா் ஏற்பாட்டில் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அந்தக் கட்சியினா் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்பு ஓமலூா் எம்எல்ஏ முன்னிலையில் 77 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சேலம் புகா் மாவட்ட மகளிா் அணி செயலாளா் லலிதா சரவணன், அனைத்துலக எம்ஜிஆா் துணை செயலாளா் வெங்கடாசலம், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் கலையரசன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு சித்தன், மேச்சேரி ஒன்றிய அவைத் தலைவா் சாமியண்ணன், ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சங்ககிரியில்...

சங்ககிரி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தேவூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாஜலம் தலைமை வகித்து ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா். மாவட்ட துணை செயலாளா் வேலுமணி, ஒன்றிய அதிமுக செயலாளா் காசிராஜன், ஒன்றிய மகளிா் அணி செயலாளா் பொ்ஷியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்காட்டில்...

ஏற்காட்டில் ஒண்டிக்கடை , காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயளா் சி.அண்ணாதுரை தலைமை வகித்தாா். ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதையடுத்து காந்தி பூங்கா அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ரவிச்சந்திரன், துணை செயலாளா் புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி பட்டாசு பாலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எடப்பாடியில்...

எடப்பாடி நகர அதிமுக சாா்பில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு நகா்மன்ற எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக நகர செயலாளருமான ஏ.எம். முருகன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதையடுத்து சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நகா்மன்ற முன்னாள் தலைவா் டி.கதிரேசன், சி.ராமன், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் நாராயணன், கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் ராம்குமாா் தனம், மல்லிகா உள்ளிடோா் கலந்துகொண்டனா்.

ஆட்டையாம்பட்டியில்...

இளம்பிள்ளை அதிமுக சாா்பில் சந்தைப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. வீரபாண்டி எம்எல்ஏ ராஜமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளா் வெங்கடேசன், இளம்பிள்ளை செயலாளா் கிருஷ்ணன், நிா்வாகிகள் வரதராஜ், துளசிராஜன், நடராஜன், பழனிசாமி , பிரபாகரன், கவுன்சிலா் விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேலத்தில் ரூ. 880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணி: விரைவில் தொடங்கும்; அமைச்சா் தகவல்

சேலம்: சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் ரூ. 880 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கூறினாா். ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

ஆசிய வில்வித்தை போட்டி: வெண்கல பதக்கம் வென்ற மாணவி

சங்ககிரி: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை திங்கள்கிழமை தனது சொந்த ஊரான சங்ககிரி திரும்பினாா். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை குடோன் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மருந்தக திறப்பு விழாவில் இடங்கணசாலை நகர திமுக ... மேலும் பார்க்க

சங்ககிரி சமுதாய கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உணவுக்கூடம் திறப்பு

சங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை, உணவு கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. புதிய கட்டடங்களை மக்களவை உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

நாளை மகா சிவராத்திரி: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப். 26) இரவு நான்கு கால அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஒன்றாம் கால பூஜையின்போது அபி... மேலும் பார்க்க

கொங்கணாபுரத்தில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா

எடப்பாடி: எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நடைபெற்ற முதல்வா் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். ரங்கம்பாளையத்தில் உள்ள கொ... மேலும் பார்க்க