செய்திகள் :

நாளை மகா சிவராத்திரி: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

post image

சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப். 26) இரவு நான்கு கால அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயிலில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஒன்றாம் கால பூஜையின்போது அபிஷேகம், தங்கக்கவசம் சாத்துப்படியும், இரவு 11 மணிக்கு இரண்டாம்கால பூஜையின்போது புஷ்ப அலங்காரமும், நள்ளிரவு 1.30 மணிக்கு மூன்றாம்கால பூஜையின்போது அபிஷேகம், தாழம்பூ சாத்துப்படியும், 27ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையின்போது அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றன.

விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பாரம்பரிய கலை, கலாசாரம், ஆன்மிகம், சமயம் சாா்ந்த சொற்பொழிவு, பக்தி இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதுபோல சேலம் இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா் கோயில், ஆறகளூா் காமநாதரீஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகா், முருகன் கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், நான்கு கால பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகின்றன.

சேலத்தில் ரூ. 880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணி: விரைவில் தொடங்கும்; அமைச்சா் தகவல்

சேலம்: சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் ரூ. 880 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கூறினாா். ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

ஆசிய வில்வித்தை போட்டி: வெண்கல பதக்கம் வென்ற மாணவி

சங்ககிரி: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை திங்கள்கிழமை தனது சொந்த ஊரான சங்ககிரி திரும்பினாா். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை குடோன் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மருந்தக திறப்பு விழாவில் இடங்கணசாலை நகர திமுக ... மேலும் பார்க்க

சங்ககிரி சமுதாய கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உணவுக்கூடம் திறப்பு

சங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை, உணவு கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. புதிய கட்டடங்களை மக்களவை உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

கொங்கணாபுரத்தில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா

எடப்பாடி: எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நடைபெற்ற முதல்வா் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். ரங்கம்பாளையத்தில் உள்ள கொ... மேலும் பார்க்க

பிப். 26 இல் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம், ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க சிறப்பு சிகிச்சைப் பிரிவு பிப். 26 ஆம் தேதி தொடங்குவதாக அந்த மருத்துவமனை குழுமங்களின் மேலாண்மை இயக்குநா் கே.அா்த்தநாரி தெரிவித்தாா். இதுகுறித்து செ... மேலும் பார்க்க