Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை
மும்பை: திருமண ஆசையில் ரூ.57 லட்சத்தை இழந்த 73 வயது மூதாட்டி; 62 வயது முதியவருக்கு வலைவீச்சு
மும்பையையொட்டி இருக்கும் தானே டோம்பிவலியில் வசிக்கும் 73 வயது மூதாட்டி திருமண வரன் தொடர்பாக ஒரு விளம்பரத்தை பேப்பரில் பார்த்தார்.
அதில் 62 வயது நபர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் பெண் தேவை என்று குறிப்பிட்டு இருந்தார்.
உடனே அந்த விளம்பரத்திலிருந்த தொலைப்பேசி நம்பரை எடுத்து மூதாட்டி பேசினார். மூதாட்டியிடம் 62 வயது முதியவர் மிகவும் கனிவாகப் பேசினார்.
அதோடு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். திருமணத்திற்குப் பிறகு புனேயில் அமைதியாக வாழ்க்கை வாழலாம் என்று சொன்னதை மூதாட்டியும் நம்பினார்.

புனேயில் இருவரும் சேர்ந்து வாழ வீடு ஒன்று வாங்கப் போகிறேன் என்றும், அதற்கு ரூ. 35 லட்சம் கொடுத்து உதவும்படியும் அந்த 62 வயது நபர் கேட்டுக்கொண்டார்.
மூதாட்டியும் அவரை நம்பி 35 லட்சத்தைக் கொடுத்தார். அதற்குப் போலி பில் மற்றும் போலி வீடு வாங்கிய ஆவணங்களை மூதாட்டியிடம் கொடுத்து நம்ப வைத்தார்.
மேலும் தற்காலிகமாக 62 வயது நபர் மூதாட்டியின் வீட்டில் தங்கினார். அப்படித் தங்கும்போது மூதாட்டியிடம் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் திருடிக்கொண்டார்.
அதோடு மூதாட்டியின் டெபிட் கார்டை திருடி அதிலிருந்து ரூ.2.2 லட்சத்தை எடுத்துக்கொண்டார்.
பின்னர் முதியவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன முதியவரைத் தேடி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY