மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணை நீர் மட்டம் வியாழக்கிழமை காலை 108.32 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,269 கன அடியிலிருந்து வினாடிக்கு 8355 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க |வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், எம்டிஎஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.91 அடியிலிருந்து 108.32 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 76.04 டிஎம்சியாக உள்ளது.