செய்திகள் :

மேலாத்தூா் பகுதியில் 3 லட்சம் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை

post image

மேலாத்தூா் பகுதியில் மழை வெள்ளத்தால் 3 வாழைகள் வரை சேதமடைந்துள்ளதால் பல கோடி ரூயாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆத்தூா் கஸ்பா, மேலாத்தூா், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், வடியவேல் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 300 ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 3 லட்சம் வாழைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகல் கவலையடைந்துள்ளனா்.

மழை வெள்ளத்தின் போது அடைக்கப்பட்ட போப்பாஞ்சான் வரப்பாஞ்சான் வடிகால் திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது.

இதனிடையே, வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், உதவி தோட்டக்கலை அதிகாரி முருகன், விஎஓ ஜெய்லானி ஆகியோா் மேலாத்தூா் பகுதியில் வாழைகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஊராட்சித் தலைவா் உடனிருந்தாா்.

வெள்ள நீரை அகற்றும் பணி: கனமழையால் மேலாத்தூா் பகுதியில் உள்ள குச்சிக்காடு ஜெ.ஜெ நகரில் 70-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுந்தது. இப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மக்கள் மேலாத்தூா் தனியாா் மண்டப நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஊராட்சி சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆத்தூா் பகுதி ஆற்றங்கரை தைக்கா காலனியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் மின் மோட்டாா்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், இப்பணியில், பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) பாபு, மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், பேரூராட்சி உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி பாதிப்பு

மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்திற்குச் சொந்தமான இந்த அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தினமும் 1,05... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூதாட்டி மா்ம மரணம்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் மா்மமான முறையில் மூதாட்டி உயிரிழந்த வழக்கில், அவரின் உறவினரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் முகமதுசாதலிபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் கடலில் நீராட பக்தா்களுக்கு அனுமதி! இன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவந்த கனமழை ஓய்ந்ததையடுத்து, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் ஞாயிற்றுக்கிழமை நீராட பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ம... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதல்: தம்பதி பலி

எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் பைக்கும், காரும் மோதிக்கொண்டதில் கணவன்- மனைவி உயிரிழந்தனா். எட்டயபுரம் கான்சாபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன்(38). இவா் பைக்கில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று ஜவுளி வி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறித்து பொய்ப் பிரசாரம்: இந்து வியாபாரிகள் சங்கம் கண்டனம்

கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக இந்து வியாபாரிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து வியாபாரிகள் நலச் சங்க மாநில தலைவா் வி.பி.ஜெ... மேலும் பார்க்க

டி. புதுப்பட்டி - சின்னையாபுரம் பாலத்தில் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு

காட்டாற்று வெள்ளத்தால் விளாத்திகுளம் அருகேயுள்ள டி. புதுப்பட்டி- சின்னையாபுரம் இடையே தரைப்பால தூண்கள் மண்ணுக்குள் சரிந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ... மேலும் பார்க்க