முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
மேலூா் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்
மேலூா் கடைகளில் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பைகளை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேலூா் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சுகாதார ஆய்வாளா் தினேஷ்குமாா் தலைமையில் நகராட்சி பணியாளா்கள் திருவாதவூா் சாலை, சிவகங்கை, திருச்சி சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை விற்பனை செய்ய வைத்திருந்த கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்தனா்.
மேலும், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 4,060 கிலோ நெகிழிப் பைகளைப் பறிமுதல் செய்தனா்.