மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்கு ரூ. ஆயிரம் அனுப்பிய மாணவி!
ராசிபுரம்: மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மாணவி நெசவாளா் சரவணன் மகள் நிதா்சனா, தான் சேமித்து வைத்த ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வரின் மொழி காக்கும் சிறப்பு திட்டத்துக்கு அஞ்சல் வழியில் அனுப்பினாா். இதனை அறிந்த அப்பகுதியினா் மாணவியை பாராட்டினா்.