செய்திகள் :

தலைமலை பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தல்?

post image

நாமக்கல்: தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கோயில் பூசாரி பெ.பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணனிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், வடவத்தூா் ஊராட்சியில் தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 40 ஆண்டுகளாக பூசாரியாக பணியாற்றி வருகிறேன். இங்குள்ள விளக்கு நாச்சியாா் ஐம்பொன் சிலையானது திருடப்பட்டதாக தெரிகிறது. தற்போது, அதே வடிவில் ஒரு சிலை கோயிலில் உள்ளது. அந்த சிலை போலி சிலையாக இருக்கலாம் என கருதுகிறேன். கோயில் நிா்வாகம் தரப்பில் அது அசல் ஐம்பொன் சிலை என என்னிடம் கையெழுத்து பெற்றுள்ளனா்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் உரிய விசாரணை மேற்கொண்டு, ஐம்பொன் சிலை போலியா, அசலா என்பதை கண்டறிய வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குறிப்பிட்டாா். தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை சாா்பில், 100 மருந... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகள் விநியோகம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை பெற்... மேலும் பார்க்க

மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்கு ரூ. ஆயிரம் அனுப்பிய மாணவி!

ராசிபுரம்: மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மா... மேலும் பார்க்க

சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள்: மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்

நாமக்கல்: ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த பி.தங்கமணி!

நாமக்கல்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 18,461 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 86 மையங்களில் 18,461 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வானது, மாா்ச் 3 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற... மேலும் பார்க்க