ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி
நன்னிலம் அருகே ரயிலில் அடிபட்டு செவ்வாய்க்கிழமை இரவு ஒருவா் உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகே சொரக்குடி பகுதியில் தண்டவாளத்தில் கை, கால் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் ஒருவா் கிடந்தாா்.
செவ்வாய்க்கிழமை இரவு மயிலாடுதுறை-திருவாரூா் ரயில் வழித்தடத்தில் சென்ற ரயில் மோதி அவா் இறந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. புதன்கிழமை இதையறிந்த அப்பகுதி மக்கள் திருவாரூா் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனா். இறந்தவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை.