ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
திருப்பத்தூா்: குடியாத்தம் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அம்பாபுரம் பகுதியை சோ்ந்தவா் டில்லி மகன் கோபால்(39). திருமணம் ஆகாத இவா்,4 ஆண்டுகளுக்கு முன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு சுய உணா்வு இல்லாமல் இருந்து வந்தாா்.
இதனால் விரக்தியடைந்த கோபால் அவ்வப்போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திங்கள்கிழமை குடியாத்தம்-வேளாளத்துாா் ரயில்வே நிலையத்துக்கும் இடையே ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று,சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.